தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கட்சி மப்ளருடன் மாணவர்கள் நடனம்ஹெச்.எம்., -- ஆசிரியர் 'டிரான்ஸ்பர்'

கட்சி மப்ளருடன் மாணவர்கள் நடனம்ஹெச்.எம்., -- ஆசிரியர் 'டிரான்ஸ்பர்'

கட்சி மப்ளருடன் மாணவர்கள் நடனம்ஹெச்.எம்., -- ஆசிரியர் 'டிரான்ஸ்பர்'


ADDED : மார் 09, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கட்சி மப்ளருடன் மாணவர்கள் நடனம்ஹெச்.எம்., -- ஆசிரியர் 'டிரான்ஸ்பர்'

கிருஷ்ணகிரி:போச்சம்பள்ளி அருகே, அரசு பள்ளி ஆண்டுவிழாவில் கட்சி மப்ளருடன் மாணவர்கள் நடனமாடிய விவகாரத்தில், தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சோபனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த, 4ம் தேதி ஆண்டு விழா நடந்தது. அதில் நடனமாடிய மாணவர்கள், பா.ம.க., மப்ளருடன் நடனமாடினர். இதற்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்கள், கட்சி துண்டுடன் நடனமாடும் வீடியோ வைரலானது. கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஷ் விசாரணை நடத்தினார். மேலும், பள்ளியில் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தமிழாசிரியர் சுப்பிரமணி, தலைமை ஆசிரியர் விஜயகுமார் இருவரும் ஒரு வாரத்தில் விளக்கம் அளித்து அறிக்கை அனுப்பவும், மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ் கூறினார்.

சோபனுார் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயக்குமாரை பன்னிஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கும், தமிழாசிரியர் சுப்பிரமணியை மேட்டுப்

புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்து, மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us