/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேரோடும் வீதியில் பூமிக்கடியில் மின் கம்பிகள்திட்டத்திற்கு நிதி ஒதுக்குமா ஓசூர் மாநகராட்சி

ADDED : மார் 13, 2025 01:50 AM
தேரோடும் வீதியில் பூமிக்கடியில் மின் கம்பிகள்திட்டத்திற்கு நிதி ஒதுக்குமா ஓசூர் மாநகராட்சி
ஓசூர்:ஓசூரில், சந்திரசூடேஸ்வரர் தேரோடும் வீதியில், பூமிக்கடியில் மின்கம்பிகளை கொண்டு செல்லும் திட்டத்திற்கு, மாநகராட்சி நிதி ஒதுக்குமா என, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது. அப்போது, தேர்ப்பேட்டை தேரோட்ட வீதிகளில் மின் சப்பை துண்டிக்கப்பட்டு, தேர் செல்ல இடையூறாக உள்ள மின்பாதை கம்பிகள் தற்காலிகமாக அகற்றப்படும். தேரோட்டம் முடிந்த பின், மின்பாதை சரி செய்யப்பட்டு மின்வினியோகம் நடக்கும். அதற்கு இரவு நீண்ட நேரமாகி விடும். மின்வாரியத்திற்கும் வேலைப்பளு, மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால், தேர்ப்பேட்டை தேரோட்ட வீதியில், தேரோட்டத்தின் போது மின் வினியோக பாதிப்பு, மின் துண்டிப்பு போன்றவற்றை தடுக்க, பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும் என, பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இத்திட்டத்திற்கு மாநகராட்சி தான் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் திட்ட மதிப்பீடு தயார் செய்யாமல் உள்ளதால், இத்திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, பணி மேற்கொள்ள, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்ட போது, 'மின்வாரிய செயற்பொறியாளரிடம் ஏற்கனவே ஒருமுறை கலந்தாலோசனை செய்தோம். இத்திட்ட செலவை மாநகராட்சி தான் ஏற்க வேண்டி வரும். அதற்கு எவ்வளவு செலவாகும் என, திட்ட மதிப்பீடு தயார் செய்து வருகிறோம். கண்டிப்பாக, தேர்ப்பேட்டையில் பூமிக்கடியில் மின்கம்பிகளை கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்துவோம்' என்றனர்.