/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தகவல்
/
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தகவல்
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தகவல்
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தகவல்
ADDED : டிச 22, 2024 01:00 AM
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு
வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தகவல்
ஓசூர், டிச. 22-
இந்திய விமானப்
படையில், வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக, ஓசூரில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிக்காட்டி நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை வகித்தார். கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலர் ஜெயஸ்ரீ வரவேற்றார். முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தாம்பரம் இந்திய விமானப்படை அலுவலர்கள் குணால்குமார், அருண்குமார் ஆகியோர், விமானப்படையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தேர்வுகள் குறித்து விளக்கினர். அப்போது, இந்திய விமானப் படையில் அதிகாரி, தரைப்பிரிவு, தொழில்நுட்பம், நிர்வாகம், கணக்கு உட்பட பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது.
தற்போது, மெடிக்கல் அசிஸ்டெண்ட் என்ற பதவிக்காக பிளஸ் 2வில், அறிவியல் பிரிவு பயின்ற மாணவர்களை மட்டும் தேர்வு செய்ய உள்ளனர். இதற்கான விபரத்தை, http://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலமாக அறியலாம். இப்பணிகளில் சேர எழுத்துத்தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு அடிப்படையில், தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். மாணவர்கள் இதற்காக, தங்களை தயார் செய்து கொள்ள கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து, விமானப்படையின் பணிகள் குறித்து, படங்களுடன் கூடிய விளக்கத்தையும் அளித்தனர். இந்திய விமானப்படை குறித்து வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.