தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பிரசவத்திற்கு தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் கர்ப்பிணிகள்ஓசூர், கிருஷ்ணகிரி பகுதியில் அதிகரிப்பு

பிரசவத்திற்கு தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் கர்ப்பிணிகள்ஓசூர், கிருஷ்ணகிரி பகுதியில் அதிகரிப்பு

பிரசவத்திற்கு தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் கர்ப்பிணிகள்ஓசூர், கிருஷ்ணகிரி பகுதியில் அதிகரிப்பு


ADDED : ஜன 18, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரசவத்திற்கு தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் கர்ப்பிணிகள்ஓசூர், கிருஷ்ணகிரி பகுதியில் அதிகரிப்பு

ஓசூர், : ஓசூர், கிருஷ்ணகிரி நகர் பகுதியில் உள்ள அரசு நகர்புற சுகாதார நிலையங்களில், தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பிடும் போது, 50 சதவீதத்திற்கும் குறைவாக பிரசவம் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர், காவேரிப்பட்டணம், பர்கூர், மத்துார், ஊத்தங்கரை, தளி, கெலமங்கலம், சூளகிரி, வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி என மொத்தம், 10 ஒன்றியங்கள் உள்ளன. இங்கு மொத்தம், 56 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், ஓசூர் மாநகராட்சியில் ஆவலப்பள்ளி, சீத்தாராம் நகர், மூக்கண்டப்பள்ளி, அப்பாவு நகர் ஆகிய, 4 அரசு நகர்புற சுகாதார நிலையங்களும், கிருஷ்ணகிரியில் ஒரு நகர்புற சுகாதார நிலையமும் இயங்கி வருகின்றன.

இங்கு ஆண்டுக்கு சராசரியாக, 10,000 பிரசவங்கள் நடக்கின்றன. கிராமப்புற ஏழை, எளிய கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உதவிகரமாக உள்ளன. ஆனால், கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியில் உள்ள, 5 அரசு நகர்புற சுகாதார நிலையங்களுக்கு, பிரசவத்திற்காக செல்லும் கர்ப்பிணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. செவிலியர்கள், பணியாளர்கள் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளை

சரியாக அணுகுவதில்லை. அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு கேட்டால், சரியாக விளக்கம் கொடுக்காமல் எரிந்து விழுவது; சரியான கவனிப்பின்மை என பல்வேறு காரணங்களுக்காக, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு நகர்புற சுகாதார நிலையங்களுக்கு பிரசவத்திற்கு செல்லும் கர்ப்பிணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்தாண்டு ஏப்., முதல், நவ., வரை, 8 மாத காலத்தில், ஓசூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஆவலப்பள்ளி, சீத்தாராம் நகர், மூக்கண்டப்பள்ளி, அப்பாவு நகர் ஆகிய, 4 அரசு நகர்புற சுகாதார நிலையங்களில் மொத்தம், 1,084 குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆனால், தனியார் மருத்துவமனைகளில் மொத்தம், 1,363 குழந்தைகள் பிறந்துள்ளன. சராசரியாக பார்க்கும் போது, ஓசூர் நகர்புற சுகாதார நிலையங்களில், 44.3 சதவீதமும், தனியார் மருத்துவமனைகளில், 55.7 சதவீதமும் குழந்தைகள் பிறந்துள்ளன. அதேபோல், கிருஷ்ணகிரி நகர்புற சுகாதார நிலையத்தில், 244 குழந்தைகளும், தனியார் மருத்துவமனைகளில், 298 குழந்தைகளும் பிறந்துள்ளன. சராசரியாக எடுத்து கொண்டால், கிருஷ்ணகிரி நகர்புற சுகாதார நிலையத்தில், 45 சதவீதமும், தனியார் மருத்துவமனைகளில், 55 சதவீதமும் குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆனால், தளி, கெலமங்கலம், சூளகிரி, வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை ஆகிய ஒன்றியங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில், 71 சதவீதத்திற்கு மேல் குழந்தைகள் பிறந்துள்ளன. சிகிச்சை தரமாக இருந்த போதும், சரியான அணுகுமுறை இல்லாததால், ஓசூர், கிருஷ்ணகிரி நகர்புற சுகாதார நிலையங்களில், ஏழை, எளிய கர்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்காக சிகிச்சைக்காக சேர தயங்குகின்றனர். அதனால் தான் தனியார் மருத்துவமனைகளை விட, அரசு நகர்புற சுகாதார நிலையங்களில் பிரசவம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us