/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்கக்கோரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ADDED : ஜன 23, 2025 01:38 AM
நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்கக்கோரி கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி, :கவுரவ விரிவுரையாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்கக்கோரி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வளாகத்தில், கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வளாகத்தில், மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவு படி, 50,000 ரூபாய் மாத ஊதியம் வழங்க
வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் செந்தில், அரசு, சென்னகிருஷ்ணன், மூவேந்தன் உள்பட, 20க்கும் மேற்பட்டோர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லுாரியில், 79 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றோம். அவர்களுக்கு, 10,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்பட்டு
வருகிறது. இதில், பல பேர், 15 ஆண்டுகளுக்கு மேலாக கவுரவ விரிவுரையாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தரமும் செய்யப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களுக்கு, ஊதியமும் வழங்கவில்லை. எனவே மாத ஊதியத்தை முறையாக வழங்க வலியுறுத்தி, காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.