/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டிய சந்தேக கணவர் தற்கொலை
/
மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டிய சந்தேக கணவர் தற்கொலை
மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டிய சந்தேக கணவர் தற்கொலை
மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டிய சந்தேக கணவர் தற்கொலை
ADDED : ஜன 24, 2025 01:37 AM
மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டிய சந்தேக கணவர் தற்கொலை
ஓசூர், ஜன.: தேன்கனிக்கோட்டையில் நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டிய கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த மேல்கோட்டையை சேர்ந்தவர் ராமசாமி, 55, கட்டட மேஸ்திரி. இவரது மனைவி முனியம்மாள், 40. இவர் தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர்களுக்கு, 2 மகன், ஒரு மகள். மூவரும் திருமணமாகி தனியே வசிக்கின்றனர்.
முனியம்மாளின் நடத்தையில் சந்தேகப்பட்டு, ராமசாமி அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம். நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராமசாமி, கத்தியால் முனியம்மாளை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில், அவருக்கு தலை, கை, கால், வயிறு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு காயம் விழுந்துள்ளது. படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் அலறிய படி, தெருவில் ஓடி வந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆத்திரத்தில் மனைவியை வெட்டிய ராமசாமி, பயத்தில் வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக பார்த்தபோது, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். படுகாயங்களுடன் முனியம்மாள், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

