தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'சிசிடிவி' கேமரா நிறுவ, பழுது நீக்கஇலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

'சிசிடிவி' கேமரா நிறுவ, பழுது நீக்கஇலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

'சிசிடிவி' கேமரா நிறுவ, பழுது நீக்கஇலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜன 24, 2025 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 01:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'சிசிடிவி' கேமரா நிறுவ, பழுது நீக்கஇலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி,: 'சிசிடிவி' கேமரா நிறுவுதல் மற்றும் பழுது நீக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியிலுள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் துவங்க பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆண், பெண் இருவருக்கும், 13 நாட்கள், 'சிசிடிவி' கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. 8ம் வகுப்பு படித்த, 18 முதல், 45 வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் வரும், 27க்குள் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி, சீருடை, காலை டிபன், மதிய உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி காலை, 9:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை நடக்கும். இப்பயிற்சியில், பயிற்சிக்கான உபகரணங்கள் செய்முறைக்காக இலவசமாக வழங்கப்படும். முடிவில், பயிற்சிக்கான சான்றிதழும், தேர்ச்சிக்கான சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கே.ஆர்.பி. அணை, கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும், 90806 76557, 94422 47921 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us