/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரையாண்டு தேர்வு தேர்ச்சி விகிதத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கு உத்தரவு

ADDED : ஜன 24, 2025 01:37 AM
அரையாண்டு தேர்வு தேர்ச்சி விகிதத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கு உத்தரவு
கிருஷ்ணகிரி : அரையாண்டு தேர்வில், மதிப்பெண் குறைந்த பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள, 49 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில், கலெக்டர் சரயு பேசியதாவது:நீங்கள் பணியாற்றும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் தேர்ச்சி விகிதம் வித்தியாசங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் கண்காணிப்பு அலுவலர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடப்பதை பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, ஆலோசனைகள் வழங்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் மாணவ, மாணவியருக்கு பாடங்களை எளிய முறையில் கற்பதற்கான வழிமுறைகளை வழங்க வேண்டும். தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும்.
சிறப்பு பயிற்சி மாணவர்களுக்கு, காலை மற்றும் மாலை நேரங்களில், சிறப்பு வகுப்புகளுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதன் அடிப்படையில் போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில், சி.இ.ஓ., (பொறுப்பு) முனிராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.