/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பழனியாண்டவர் ஆண்டிமலை முருகர் கோவிலில் தைப்பூச திருவிழா துவக்கம்
/
பழனியாண்டவர் ஆண்டிமலை முருகர் கோவிலில் தைப்பூச திருவிழா துவக்கம்
பழனியாண்டவர் ஆண்டிமலை முருகர் கோவிலில் தைப்பூச திருவிழா துவக்கம்
பழனியாண்டவர் ஆண்டிமலை முருகர் கோவிலில் தைப்பூச திருவிழா துவக்கம்
ADDED : பிப் 07, 2025 01:08 AM
பழனியாண்டவர் ஆண்டிமலை முருகர் கோவிலில் தைப்பூச திருவிழா துவக்கம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கூரம்பட்டி தேனோடை நகரில் அமைந்துள்ள பழனியாண்டவர், ஆண்டிமலை முருகர் கோவிலில், 24ம் ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, காலை, 7:30 மணிக்கு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பழனி ஆண்டவருக்கு மூலமந்திர ஹோமம் நடத்தப்பட்டு, கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்து, கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
வரும், 11 காலை, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பள்ளிப்பட்டி தென்பெண்ணை ஆற்றில் கங்கை பூஜையும், சுவாமி ஊர்வலம், காவடி ஆட்டம், கரகாட்டம், கிராமிய கலைக்குழுவினரின் தாரை, தப்பட்டையுடன் கோலாட்டம் ஆகியவை நடக்க உள்ளது. காலை, 8:30 மணிக்கு, பழனிஆண்டவர் ஆண்டிமலை முருகர் கோவிலில் அபிஷேக ஆராதனைகள் நடக்க உள்ளது. 12:00 மணிக்கு, கூரம்பட்டி விநாயகர் கோவிலில், அலகு குத்துதலும், இரவு வாணவேடிக்கையும் நடக்கிறது.
************************************