/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ராயக்கோட்டையில் விவசாயி தற்கொலை:தி.மு.க., நிர்வாகி காரணம் என கடிதம்

ADDED : பிப் 19, 2025 01:19 AM
ராயக்கோட்டையில் விவசாயி தற்கொலை:தி.மு.க., நிர்வாகி காரணம் என கடிதம்
ஓசூர்:ராயக்கோட்டையில், விவசாயி தற்கொலை செய்த நிலையில், 'என் சாவிற்கு, தி.மு.க., ஒன்றிய செயலாளர் தான் காரணம்' என, அவர் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை ரஹ்மத் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 70; விவசாயி. இவர் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அவரது சட்டை பாக்கெட்டில், 2 கடிதம் இருந்துள்ளது. ஒன்றில் போலீசாருக்கு வழங்க வேண்டும் என்றும், மற்றொரு கடிதத்தில், தன் நண்பர் சரவணனிடம் தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கிருஷ்ணன் எழுதியதாக கூறப்படும் அக்கடிதத்தில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஒருவரது பெயரை குறிப்பிட்டு, அவர் தான், தன் சாவிற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையில் கிருஷ்ணன் எழுதிய கடிதம் தானா என கண்டறிய, ராயக்கோட்டை போலீசார் அவற்றை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
இது குறித்து, அவரது உறவினர்கள் கூறுகையில், 'கிருஷ்ணன் சமீபத்தில், 40 சென்ட் நிலத்தை, 82 லட்சம் ரூபாய்க்கு ராமையா என்பவருக்கு விற்றார். அதற்கு அட்வான்ஸ் தொகையாக, 10 லட்சமும், பத்திரப்பதிவு முடிந்தவுடன், 22.50 லட்சம் ரொக்கமாகவும், 27.50 லட்சத்தை காசோலையாகவும் வாங்கினார். மொத்தம், 60 லட்சம் ரூபாய் மட்டுமே கிருஷ்ணனுக்கு கிடைத்தது. மீதமுள்ள பணம் அவருக்கு வழங்கப்படாத நிலையில், இப்பிரச்னை குறித்து பேச நேற்று முன்தினம் கிருஷ்ணனை சிலர், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு என்ன நடந்தது என தெரியவில்லை. அதன் பின் தான் கிருஷ்ணன் தற்கொலை முடிவை
எடுத்துள்ளார்' என்றனர்.