தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கள்ளக்காதலி இறப்பால் வேதனை சரக்கு வாகன டிரைவர் தற்கொலை

கள்ளக்காதலி இறப்பால் வேதனை சரக்கு வாகன டிரைவர் தற்கொலை

கள்ளக்காதலி இறப்பால் வேதனை சரக்கு வாகன டிரைவர் தற்கொலை


ADDED : மார் 03, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்காதலி இறப்பால் வேதனை சரக்கு வாகன டிரைவர் தற்கொலை

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த எஸ்.குருப்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ், 39, சரக்கு வாகன டிரைவர். இவருக்கும், சந்தனப்பள்ளியை சேர்ந்த அஞ்சலி, 29, என்பவருக்கும் கடந்த ஓராண்டாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இதையறிந்த மாதேசின் மனைவி நேத்ரா, வீட்டை ஓசூருக்கு இடமாற்றம் செய்தார். கடந்த, 26ல் அஞ்சலி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனவேதனையில் இருந்த மாதேஷ் கடந்த, 28 மாலை பேவநத்தம் மலை பகுதியில் விஷம் குடித்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், நேற்று முன்தினம் இறந்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us