/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாய பாத்திமா அன்னை ஆலயத்தில்சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலி
/
துாய பாத்திமா அன்னை ஆலயத்தில்சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலி
துாய பாத்திமா அன்னை ஆலயத்தில்சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலி
துாய பாத்திமா அன்னை ஆலயத்தில்சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலி
ADDED : மார் 06, 2025 01:18 AM
துாய பாத்திமா அன்னை ஆலயத்தில்சாம்பல் பூசும் திருநாள் சிறப்பு திருப்பலி
கிருஷ்ணகிரி:ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகின்ற தவக்காலத்தின் துவக்க நாளாக, சாம்பல் புதன் உள்ளது.
இந்த நாளில் நடத்தப்படுகின்ற சிறப்பு திருப்பலி பூஜையில், கிறிஸ்தவர்கள் தங்களுடைய நெற்றியில் சாம்பலை, சிலுவை அடையாளமாக வைத்துக் கொண்டு தவநாட்களை கடைபிடிக்க துவங்குகின்றனர்.
அதன்படி, நேற்று காலை, 6:00 மணிக்கு, கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை திருத்தலத்தில், தவக்காலத்திற்கான சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருபலி நடந்தது.
திருப்பலியை, திருத்தல பங்குத்தந்தை இசையாஸ் முன்னின்று நடத்தினார். இதில், கிறிஸ்தவர்கள் தங்களுடைய நெற்றியில் சாம்பலை வைத்துக் கொண்டு, தங்களுடைய தவமுயற்சிகளை துவங்கினர். தவக்காலத்தை அனுஷ்டிப்பவர்கள் அசைவ உணவுகள், போதை பொருட்களை தவிர்த்து, சுத்த போஜனம் கடைபிடிக்க வேண்டும் எனவும், தங்களிடம் உள்ள தீய பழக்கங்களை களைவதற்கு, இந்த தவநாட்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் திருப்பலியில் அறிவுறுத்தப்பட்டது.
இதே போல், சுண்டம்பட்டி, எலத்தகிரி, புஷ்பகிரி, கந்திகுப்பம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் நேற்று தவக்கால சாம்பல் புதன் சிறப்பு திருப்பலிகள் நடந்தது.
'கட்சிக்காக தன்மானத்தைதியாகம் செய்யுங்கள்'கிராமங்களில், சொந்த பந்தங்களுடன் ஏற்படும் சின்ன சின்ன தகராறுகளை மனதில் வைத்துக் கொண்டு பேசாமல் இருக்க வேண்டாம். பேசாமலுள்ள சகோதர, சகோதரிகளை அணுகி அவர்களிடமும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட வேண்டும்.
எதிரியாக இருந்தாலும் கூட, வீட்டை தேடி வந்தவர்களை வா என அழைப்பது தமிழரின் பண்பாடு.நம்மிடத்தில் பேசாதவர்களிடமும் பேசி, கட்சிக்காக தன்மானத்தை தியாகம் செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கான எதிர்கால கட்டமைப்பை உருவாக்கி தந்தவர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா தான். முகத்தை பார்த்து ஓட்டு போட எந்த தலைவர்களும் இல்லை. கட்சி நிர்வாகிகளான நீங்கள் தான் எம்.ஜி.ஆர்.,
முனுசாமிஅ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர்