/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன்மூங்கிலேரி மக்கள் சாலை மறியல்
/
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன்மூங்கிலேரி மக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன்மூங்கிலேரி மக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன்மூங்கிலேரி மக்கள் சாலை மறியல்
ADDED : மார் 09, 2025 01:40 AM
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன்மூங்கிலேரி மக்கள் சாலை மறியல்
ஊத்தங்கரை:மூங்கிலேரி கிராமத்தில், கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி, கிராம மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மூங்கிலேரி கிராமத்தில் முறையான குடிநீர் வழங்கவில்லை. கடந்த, 6 மாதத்திற்கு மேலாக கழிவுநீர் கால்வாய் துார் வாராமல் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதனால், மூங்கிலேரி கிராமப்புற சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடம் வந்த, ஊத்தங்கரை தாசில்தார் திருமால் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்து சென்றனர்.