/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சூளகிரி அருகே மூதாட்டி கொலையில்டி.ஐ.ஜி., - எஸ்.பி.,க்கள் தீவிர விசாரணை
/
சூளகிரி அருகே மூதாட்டி கொலையில்டி.ஐ.ஜி., - எஸ்.பி.,க்கள் தீவிர விசாரணை
சூளகிரி அருகே மூதாட்டி கொலையில்டி.ஐ.ஜி., - எஸ்.பி.,க்கள் தீவிர விசாரணை
சூளகிரி அருகே மூதாட்டி கொலையில்டி.ஐ.ஜி., - எஸ்.பி.,க்கள் தீவிர விசாரணை
ADDED : மார் 21, 2025 01:26 AM
சூளகிரி அருகே மூதாட்டி கொலையில்டி.ஐ.ஜி., - எஸ்.பி.,க்கள் தீவிர விசாரணை
கிருஷ்ணகிரி:சூளகிரி அருகே, மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், சேலம் டி.ஐ.ஜி., உமா அங்கு, 2வது நாளாக விசாரணை நடத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அட்டகுறுக்கியை சேர்ந்தவர் நாகம்மா, 65. இவரது குடும்பத்தினர் நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்த போது, நாகம்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலை, 4:00 மணியளவில் அவரது வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியது. தகவலின்படி வந்த சூளகிரி போலீசார், தீக்காயங்களுடன் இறந்து கிடந்த நாகம்மாவின் சடலத்தை மீட்டனர்.
அவரது உடலின் பல இடங்களில் ரத்த காயம் இருந்தது. வீட்டிலிருந்து, 5 லட்சம் ரூபாய், 20 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. மூதாட்டியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள், வீட்டிலுள்ள பொருட்களுக்கு தீ வைத்தது தெரிந்தது.
அதேபோல கடந்த, 12ல் ஓசூர் ஒன்னல்வாடியில் வசித்த முதியவர் லுார்துசாமி, 70, அவரது கொழுந்தியாள் எலிசபெத், 60, ஆகியோரை மர்மநபர்கள் கத்தியால் வெட்டி கொன்று வீட்டிலிருந்த சோபாக்களுக்கு தீ வைத்து சென்றனர். மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கொலையாளிகளை பிடிக்க, 5 தனிப்படைகள் அமைத்தார்.
அதே பாணியில்
போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காத நிலையில், நேற்று முன்தினம் அதே பாணியில், மற்றொரு கொலை நடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில், இரு சம்பவங்களில் மூவர் கொல்லப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒரே பாணியில் அடுத்தடுத்து கொலைகள் நடந்தும், எந்த துப்பு கிடைக்காமல் போலீசார் திணறுகின்றனர்.
சேலம் டி.ஐ.ஜி., உமா நேற்று முன்தினம் கொலை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முகாமிட்ட அவர் நேற்று, 2வது நாளாக விசாரணை நடத்தினார். அவருடன் எஸ்.பி.,க்கள் கிருஷ்ணகிரி தங்கதுரை, நாமக்கல் ராஜேஷ் கண்ணன் ஆகியோரும், தனித்தனி குழுக்களாக பிரிந்து, மாவட்டம் முழுவதும் விசாரித்து வருகின்றனர்.
தற்போது, தமிழக சட்டசபை நடப்பதால், இச்சம்பவங்கள் பேசு பொருளாகி விடக்கூடாது என்பதற்காக, போலீசார் திடீர் வேகம் காட்டி வருகின்றனர். கொலையாளிகள் புதன்கிழமையை தேர்ந்தெடுத்து சம்பவங்களை நிகழ்த்தி உள்ளனர்.
ஒரே பாணியில் கொலைகளை அரங்கேற்றுகின்றனர். வீட்டில் தனியாக உள்ள முதியவர்களை அடையாளம் கண்டு கொலை செய்து, போலீசாருக்கு சவால் விடுகின்றனர். வரும் வாரத்தில் அடுத்த கொலை நடக்குமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது. வீட்டில், முதியவர்கள் தனியாக இருக்கவே பயமாக இருக்கும் சூழல் உள்ளது. எனவே, கொலையாளிகளை பிடிக்க, போலீசார் தீவிரம் காட்ட வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.