/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி நகராட்சியுடன் இணைக்க பையனப்பள்ளி பஞ்., மக்கள் எதிர்ப்பு
/
கி.கிரி நகராட்சியுடன் இணைக்க பையனப்பள்ளி பஞ்., மக்கள் எதிர்ப்பு
கி.கிரி நகராட்சியுடன் இணைக்க பையனப்பள்ளி பஞ்., மக்கள் எதிர்ப்பு
கி.கிரி நகராட்சியுடன் இணைக்க பையனப்பள்ளி பஞ்., மக்கள் எதிர்ப்பு
ADDED : அக் 04, 2024 01:23 AM
கிருஷ்ணகிரி, அக். 4-
கிருஷ்ணகிரி நகராட்சியுடன் இணைக்க, பையனப்பள்ளி பஞ்., மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி நகராட்சியுடன், கட்டிகானப்பள்ளி, பையனப்பள்ளி பஞ்.,களை இணைக்க கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. இதற்கு கட்டிகானப்பள்ளி பஞ்., மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நேற்று முன்தினம் நடந்த கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பையனப்பள்ளி பஞ்., மக்களும், கிருஷ்ணகிரி நகராட்சியுடன் தங்கள் பகுதியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் பஞ்., நிர்வாகம் மூலம் தேவையானவற்றை பெற்றுள்ளோம். நகராட்சியுடன் இணைத்தால், ஊரக வேலை திட்ட பணி உள்பட பல்வேறு பாதிப்புகள் மட்டுமே அதிகமாகும். எனவே, எங்கள் பகுதியை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது. தவறும் பட்சத்தில் எங்கள் பகுதி மக்கள், ரேஷன், ஆதார் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து, போராட்டத்தில் ஈடுபடுவோம். இது குறித்து கிராமசபை கூட்டத்திலும், தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது, என்றனர்.