/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்லுாரி மாணவி உட்பட நான்கு பேர் மாயம்
/
கல்லுாரி மாணவி உட்பட நான்கு பேர் மாயம்
ADDED : அக் 04, 2024 01:24 AM
கல்லுாரி மாணவி உட்பட
நான்கு பேர் மாயம்
கிருஷ்ணகிரி, அக். 4-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லுாரி மாணவி உட்பட, 4 பேர் மாயமாகினர்.
ஓசூர், என்.பி., அக்ரஹாரத்தை சேர்ந்தவர் நாகராஜ்ரெட்டி, 29, விவசாயி. கடந்த மாதம், 26 இரவு, வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரின் மனைவி புகார் படி ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
பர்கூர் அடுத்த ஏ.நாகமங்கலத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 36. இவரது மகன் உடல்நலம் பாதித்த நிலையில் பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த, 1ல் அவரை பார்த்து விட்டு வீட்டிற்கு செல்வதாக கூறி, பர்கூர் பஸ் ஸ்டாண்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. அவர் மனைவி புகார் படி, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பர்கூர் அடுத்த பேட்டையன்கொட்டாயை சேர்ந்தவர் வினிதா, 19, முதலாமாண்டு கல்லுாரி மாணவி. கடந்த மாதம், 30ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். மாணவியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதில், காவேரிப்பட்டணம் அடுத்த கரடிஹள்ளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பெருமாள், 24, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு, தொட்டகளச்சந்திராவை சேர்ந்தவர் லோகிதா மாதடா, 44, தனியார் நிறுவன ஊழியர். இவர் உத்தனப்பள்ளி அடுத்த பண்டப்பள்ளி சிவன் கோவிலுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளார். அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சொல்வதாக கூறி சென்றவர் மாயமானார். அவரது மனைவி புகார் படி, உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.