/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ராணுவ தளவாட தயாரிப்புக்காக ஓசூரில் புதிய ஆலை துவக்கம்
/
ராணுவ தளவாட தயாரிப்புக்காக ஓசூரில் புதிய ஆலை துவக்கம்
ராணுவ தளவாட தயாரிப்புக்காக ஓசூரில் புதிய ஆலை துவக்கம்
ராணுவ தளவாட தயாரிப்புக்காக ஓசூரில் புதிய ஆலை துவக்கம்
ADDED : டிச 25, 2024 02:25 AM
ஒசூர், டிச. 25-
தமிழகத்தின் ஓசூரில், ராணுவ தளவாட தயாரிப்பு ஆலையை, எச்.எப்.சி.எல்., நிறுவனம் துவக்கியுள்ளது.
ஹிமாச்சல் பியூச்சரிஸ்டிக் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் என்ற பெயரில், குருகிராமை தலைமையிடமாக கொண்ட
இந்நிறுவனம், தொலைதொடர்பு உபகரணங்களை தயாரித்து வந்தது. பின்னர், எச்.எப்.சி.எல்., என பெயர் மாற்றப்பட்ட நிலையில், ராணுவ தளவாட உற்பத்தியில் கால் பதிக்கிறது.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு
அமைப்பான டி.ஆர்.டி.ஓ.,வின் தலைவர் சதீஷ் ரெட்டி, இந்த ஆலையை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், உலக அளவிலான ராணுவ தளவாட ஏற்றுமதியாளராகும் நோக்கிலும், ராணுவ தளவாட இறக்குமதியை குறைக்க உதவவும் எச்.எப்.சி.எல்., கவனம் செலுத்துவதாக கூறினார்.
இந்த ஆலையில், தெர்மல் வெப்பன் சைட்ஸ், எலக்ட்ரானிக் பியூஸ், உயர்திறன் கொண்ட ரேடியோ ரிலே, கண்காணிப்பு ரேடார் ஆகியவை தயாரிக்கப்பட உள்ளன.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் நோக்கத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில், நாட்டின் ராணுவ தளவாட தயாரிப்பை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பு உருவாக்கவும் இந்த ஆலை உதவும்.

