ADDED : ஜன 24, 2025 01:16 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தில், திட்ட மதிப்புத்தொகையில், 35 சதவீதம் அல்லது, 3.50 லட்சம் ரூபாய் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும். தவணை தொகையினை சரியாக செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும், 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
தொழில் முனைவோர்களாக விருப்பமுள்ளவர்கள், தாட்கோ இணையதள முகவரியில் (http:/newscheme.tahdco.com) விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
