/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வருவாய் கிராம ஊழியர் சங்கம் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்
/
வருவாய் கிராம ஊழியர் சங்கம் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்
வருவாய் கிராம ஊழியர் சங்கம் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்
வருவாய் கிராம ஊழியர் சங்கம் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 24, 2025 01:39 AM
கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் இளையவன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜேஷ்கண்ணா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, ஓய்வு பெற்ற மாவட்ட பொறுப்பாளர் அம்மாசி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 30 ஆண்டுகளாக போராடி வரும் கிராம உதவியாளர்களின் வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.
கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலையை உடனடியாக வழங்க வேண்டும். சி.பி.எஸ்., திட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் இறந்துபோன ஊழியர்களுக்கு பிடித்தம் செய்த பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட, 3 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.