/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'ஸ்மார்ட்' வகுப்பறை அரசு பள்ளியில் திறப்பு
/
'ஸ்மார்ட்' வகுப்பறை அரசு பள்ளியில் திறப்பு
ADDED : ஜன 30, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஸ்மார்ட்' வகுப்பறை அரசு பள்ளியில் திறப்பு
ஓசூர்:ஓசூர் அருகே, கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கோரிக்கையை ஏற்று, ஓசூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பில், ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று மாணவ, மாணவியருடன் சேர்ந்து திறந்து வைத்தார். பள்ளி தலைமையாசிரியை லதா, தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர்கள் வீரபத்திரப்பா, பாபு, ரமேஷ், பொருளாளர் சம்பத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.