/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குப்பை மேடாக பத்தலப்பள்ளிசுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி
/
குப்பை மேடாக பத்தலப்பள்ளிசுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி
குப்பை மேடாக பத்தலப்பள்ளிசுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி
குப்பை மேடாக பத்தலப்பள்ளிசுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி
ADDED : பிப் 13, 2025 01:24 AM
குப்பை மேடாக பத்தலப்பள்ளிசுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி
ஓசூர்:சூளகிரி ஒன்றியம், பேரண்டப்பள்ளி பஞ்., பத்தலப்பள்ளியில், 2,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவில் குப்பை தொட்டி இல்லாததால், தங்கள் வீடுகளில் சேறும் குப்பையை, அப்பகுதியிலுள்ள காலி இடத்தில் பொதுமக்கள் கொட்டி வருகின்றனர். இவை பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் நாய்கள், மாடுகள் கிளறி விடுகின்றன.
அதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உருவாகியுள்ளது. பேரண்டப்பள்ளி பஞ்., தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், குப்பை அள்ள கூட, துாய்மை பணியாளர்கள் வருவதில்லை.
அதுமட்டுமின்றி, ஓசூர் மாநகராட்சியுடன் பேரண்டப்பள்ளி பஞ்., இணைக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நிலையில், பத்தலப்பள்ளி பகுதி மக்கள் கடும் சுகாதார சீர்கேட்டால் அவதியடைந்து வருகின்றனர். மேலும், அப்பகுதியிலுள்ள சாக்கடை கால்வாயில் குப்பை விழுந்து அடைப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, உடனடியாக குப்பையை அகற்றுவதுடன், குப்பை தொட்டி வைத்து, அடிக்கடி சேகரிக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.