/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்குவாரியால் விவசாயம் பாதிப்பு விவசாயிகள் எதிர்ப்பு
/
கல்குவாரியால் விவசாயம் பாதிப்பு விவசாயிகள் எதிர்ப்பு
கல்குவாரியால் விவசாயம் பாதிப்பு விவசாயிகள் எதிர்ப்பு
கல்குவாரியால் விவசாயம் பாதிப்பு விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : பிப் 19, 2025 01:31 AM
கல்குவாரியால் விவசாயம் பாதிப்பு விவசாயிகள் எதிர்ப்பு
பாப்பிரெட்டிப்பட்டி,பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானுார் --மெணசி செல்லும் வழியில், ஆலாபுரம் கிராமத்துக்கு உட்பட்ட கோம்பைகாட்டிற்கு செல்லும் வழியில் அரசின் டாமின் நிறுவனத்துக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு, 30 ஆண்டுகளுக்கு முன், 2 தனியார் நிறுவனங்கள் செயல்பட்ட நிலையில், விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது. மீண்டும் கடந்த மாதம், 26ல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அங்கே கனரக இயந்திரங்கள் மூலம் அந்நிறுவனத்தில் பணி நடந்ததை கண்ட விவசாய அமைப்புகள், போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய அதிகாரிகள், முத்தரப்பு கூட்டம் நடத்தி மக்கள் திருப்தி ஏற்படும் பட்சத்தில், அரசு குவாரி நடத்த ஒப்புதல் வழங்கும் என தெரிவித்தனர். ஆனால், அவ்வாறு நடத்தாமல் கல்குவாரி நடத்தப்படுகிறது.
விவசாயம் பாதிப்பதாக, குல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கல்குவாரி அமைக்கும் பணியில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசு பின்பற்றவில்லை எனவும், ஆகவே முத்தரப்பு கூட்டத்தை கூட்டி மக்கள், விவசாயிகள் கருத்தை கேட்ட பின்பு, கல்குவாரி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.