/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியின்றி எருது விடும் விழாமாடு முட்டியதில் முதியவர் பலி
/
அனுமதியின்றி எருது விடும் விழாமாடு முட்டியதில் முதியவர் பலி
அனுமதியின்றி எருது விடும் விழாமாடு முட்டியதில் முதியவர் பலி
அனுமதியின்றி எருது விடும் விழாமாடு முட்டியதில் முதியவர் பலி
ADDED : மார் 02, 2025 01:24 AM
அனுமதியின்றி எருது விடும் விழாமாடு முட்டியதில் முதியவர் பலி
கிருஷ்ணகிரி:வேப்பனஹள்ளி அருகே, அனுமதியின்றி நடந்த எருதுவிடும் விழாவில் மாடு முட்டி முதியவர் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளி கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. காளைகள் ஓடுவதற்கு சாலையின் இருபுறத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலும், முறையான ஏற்பாடு செய்யவில்லை.
எருது விடும் விழாவில் வேப்பனப்பள்ளி, சூளகிரி, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி, திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காலை, 8:00 மணி முதல் தொடங்கிய எருது விழாவை காண சுற்று வட்டாரத்திலிருந்து, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். ஏராளமான காளைகள் அடுத்தடுத்து ஓடி, செல்வதற்கு இடமில்லாமல் ஒன்றுடன் ஒன்று முட்டியும், சாலைகளிலும் திரிந்தன. அப்போது, அப்
பகுதியில் நின்றவர்களையும் காளைகள் முட்டி தள்ளின.
காலை, 11:00 மணியளவில் எருதுவிடும் விழாவை காண வந்த, வி.மாதேப்பள்ளியை சேர்ந்த முதியவர் இருசன், 65, என்பவரை ஒரு காளை முட்டி தள்ளியது. இதில் துாக்கி வீசப்பட்ட இருசன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார். வேப்பனஹள்ளி போலீசார் சடலத்தை மீட்டு, விசாரித்து வருகின்றனர். கடந்தாண்டு இதே கிராமத்தில் நடந்த, எருது விடும் விழாவில் காளை முட்டி அதேபகுதியை சேர்ந்த பள்ளி மாணவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.