/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொத்தடிமைகள் மீட்பு விவகாரம்செங்கல் சூளை உரிமையாளர் கைது
/
கொத்தடிமைகள் மீட்பு விவகாரம்செங்கல் சூளை உரிமையாளர் கைது
கொத்தடிமைகள் மீட்பு விவகாரம்செங்கல் சூளை உரிமையாளர் கைது
கொத்தடிமைகள் மீட்பு விவகாரம்செங்கல் சூளை உரிமையாளர் கைது
ADDED : மார் 09, 2025 01:39 AM
கொத்தடிமைகள் மீட்பு விவகாரம்செங்கல் சூளை உரிமையாளர் கைது
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் மடத்தானுார், மத்துார், ஓலைப்பட்டி, பாலேதோட்டம் உள்ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு பல பகுதிகளை சேர்ந்தோர், வறுமையால் குடும்பத்துடன் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தனர். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின்படி கடந்த, 5ல் போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா தலைமையில், கொத்தடிமை மீட்பு குழுவினர் செங்கல் சூளைகளில் ஆய்வு செய்தனர். மடத்தானுாரிலுள்ள செங்கல் சூளைகளில், 10 குழந்தைகள் உட்பட, 21 பேர் கொத்தடிமைகளாக பணியாற்றியது தெரிந்து, அவர்களை மீட்டு, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகானிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் செங்கல்சூளையில் மீட்கப்பட்டவர்கள் அனைவரும், சிங்காரப்பேட்டை அடுத்த, மூன்றம்பட்டி, ராஜிவ்நகரை சேர்ந்தவர்கள் என தெரிந்தது. அவர்களை அவர்களின் சொந்த ஊருக்கு, அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
ஆர்.டி.ஓ., தொடர் விசாரணையில், மடத்தானுாரை சேர்ந்த தங்கமுத்து, 57, என்பவர் தன் செங்கல் சூளையில், இவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்தது தெரிந்தது. தாசில்தார் சத்யா புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் தங்க
முத்துவை கைது செய்தனர்.