/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பாத வனத்துறைகிராமங்களை நோக்கி படையெடுக்கும் யானைகள்

ADDED : ஏப் 01, 2025 01:32 AM
தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பாத வனத்துறைகிராமங்களை நோக்கி படையெடுக்கும் யானைகள்
ஓசூர்:ஓசூர் வனக்கோட்டத்தில், வனப்பகுதிக்குள் உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் நீர் நிரப்பாமல் உள்ளதால், யானை போன்ற வன விலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்திலுள்ள இயற்கை குட்டைகளில், கோடை வெயில் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்துள்ளது. போதிய நீர் கிடைக்காததால், வன விலங்குகள் அருகிலுள்ள கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றன. குறிப்பாக, யானைகள் அதிகளவில் கிராமங்களை நோக்கி, தண்ணீர் மற்றும் உணவு தேடி வருவதால், விவசாய பயிர்கள் சேதமாகி வருகிறது. வனத்துறையினர், கோடையில் வனவிலங்குகள் கிராமங்களுக்குள் தண்ணீர் தேடி செல்வதை தடுக்க, தண்ணீர் தொட்டிகள் அமைத்துள்ளனர். ஜவளகிரி வனச்சரகம், தளி அடுத்த சத்திரம்தொட்டி கிராமம் அருகே, வனப்பகுதியில், சங்கரேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இதன் அருகே வனத்துறை மூலம் போர்வெல் போடப்பட்டு, தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் நீர் நிரப்பாமல் உள்ளதால், யானைகள் தண்ணீருக்காக கிராமங்களுக்குள் வருகின்றன.
நேற்று முன்தினம் கும்ளாபுரம் கிராமத்திற்குள் புகுந்த, 5 யானைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி சென்றன. இதனால் கடும் அதிருப்தியடைந்த விவசாயிகள், நேற்று தண்ணீர் நிரப்பாத தொட்டிக்கு சென்று, வனத்துறையினர் உடனடியாக தண்ணீர் நிரப்ப வலியுறுத்தினர். வனத்திற்குள் வனத்துறையினர் அமைத்துள்ள தண்ணீர் தொட்டிகளில், கோடை காலம் உட்பட அனைத்து நேரங்களிலும், தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். ஆனால், ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள பெரும்பாலான தொட்டிகளில், வனத்துறையினர் தண்ணீர் நிரப்புவதில்லை. அதனால், தான் யானை போன்ற வன விலங்குகள் கிராமத்திற்குள் வருவதாக, விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.