/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி திறப்பு விழாவிண்ணப்பங்கள் வழங்கி அட்மிஷன் துவக்கம்

ADDED : ஏப் 05, 2025 01:36 AM
வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி திறப்பு விழாவிண்ணப்பங்கள் வழங்கி அட்மிஷன் துவக்கம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.சி., மற்றும் மாண்டிசோரி) துவங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது.
செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன செயலாளர் லாசியா தம்பிதுரை தலைமை வகித்து, பள்ளியை திறந்து வைத்து, பிரிகேஜி முதல், 8 ம் வகுப்பு வரை அட்மிஷன் விண்ணப்பங்கள் வழங்கி, மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தார். மாணவ, மாணவியரின் பெற்றோர் ஆர்வமுடன் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.
முன்னதாக சிறப்பு பூஜை, ஹோமங்கள் நடந்தன. வேளாங்கண்ணி பள்ளிகள் குழும அறங்காவலர் சுரேஷ்பாபு, தாளாளர் கூத்தரசன், இயக்குனர் விஜயலட்சுமி, அதியமான் கல்வி குழும இயக்குனர் ரங்கநாத், மேலாளர் நாராயணன், அதியமான் கல்லுாரி டீன் வெங்கடேஷ் செல்வம், முதல்வர் ராதாகிருஷ்ணன், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் ராஜாமுத்தையா, இருப்பிட மருத்துவ அலுவலர் பார்வதி, எம்.ஜி.ஆர்., கல்லுாரி முதல்வர் முத்துமணி, அறிஞர் அண்ணா கல்லுாரி முதல்வர் தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.