/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த வாலிபர் இருவர் கைது
/
இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த வாலிபர் இருவர் கைது
இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த வாலிபர் இருவர் கைது
இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த வாலிபர் இருவர் கைது
ADDED : ஏப் 05, 2025 01:36 AM
இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த வாலிபர் இருவர் கைது
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வழியாக செல்லும் கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், வாலிபர்கள் தினமும் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து வருகின்றனர்.
இதனால் அவ்வப்போது விபத்துகள் நடக்கின்றன. வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. இது தொடர்பாக, போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இந்நிலையில், ஓசூர் சீத்தாராம் மேடு பஸ் ஸ்டாப் அருகே, பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வாலிபர் இருவர் மொபட்டில் நேற்று முன்தினம் வீலிங் செய்தனர்.
இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, வீலிங் செய்ததாக ஓசூர் முக்கால் சென்ட் ஜெய்சக்தி நகரை சேர்ந்த உம்ரேஷ், 20, ஓசூர் ராம்நகரை சேர்ந்த இம்ரான், 19, ஆகிய இருவரை போலீசார் கைது
செய்தனர். அவர்களிடம் இருந்து இரு மொபட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.