/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூடுதுறையில் பார்க்கிங் பகுதியில் உடைந்தகம்பியால் வாகனம் ஆற்றில் பாயம் அபாயம்

ADDED : ஏப் 11, 2025 01:27 AM
கூடுதுறையில் பார்க்கிங் பகுதியில் உடைந்தகம்பியால் வாகனம் ஆற்றில் பாயம் அபாயம்
பவானி:இந்திய அளவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக, பவானி கூடுதுறை கோவில் திகழ்கிறது. தென்னகத்தின் காசி என பெயர் பெற்றாலும், கூடுதுறை பகுதி எப்போதும் சுகாதார சீர்கேடாகவே காணப்படுகிறது. இந்த பாவத்துக்கு எங்கு பரிகாரம் செய்வதோ தெரியவில்லை என்பதும், பக்தர்களின் புலம்பலாக உள்ளது.
மக்கள், பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த, பவானி ஆற்றை ஒட்டிய பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரிகார மண்டபம் செல்லும் நுழைவுவாயில் முன், பார்க்கிங் பகுதியில் தடுப்பு கம்பி உடைந்து விழுந்துள்ளது. பகலில் கம்பி இல்லாதது தெரியும். இதனால் விபத்துக்கு வாய்ப்பில்லை. அதேசமயம் இரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல், பவானி ஆற்றில் வாகனம் பாயும் அபாயம் உள்ளது. வெளி மாநில, மாவட்ட பயணிகள் தடுப்பு கம்பிகளை தாண்டி, சாப்பிட்ட இலைகளை ஆற்றில் வீசுகின்றனர். வீசும் போது நிதானம் தவறினால் அவர்களும் ஆற்றில் விழும் நிலை உள்ளது. காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிக்கும் இடம், பரிகார மண்டபம், படித்துறை பகுதியை கோவில் நிர்வாகம் சுகாதாரமாக வைத்துக் கொள்வதில் முறையாக கவனம் செலுத்துவதில்லை என்பதே உண்மை. பக்தர்கள், மக்களிடம் அந்த கட்டணம், இந்த கட்டணம் வாங்குவதில் காட்டும் அக்கறையை, பெயர் பெற்ற புண்ணியஸ்தலத்தை சுகாதாரமாக வைத்திருப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.