/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்சர்க்கரை பொங்கல் வழங்கும் போராட்டம்

ADDED : ஏப் 12, 2025 01:41 AM
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்சர்க்கரை பொங்கல் வழங்கும் போராட்டம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், அகலக்கோட்டை பஞ்.,க்கு உட்பட்ட ஜவனசத்திரம், ராமாபுரம், கோலப்பனதொட்டி, கரகூர் கிராமங்களில் தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி, அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தனர்.
ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், தளி ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், தளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன், நேற்று காலை அதிகாரிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கும் போராட்டம் நடந்தது.
புருேஷாத்தமரெட்டி தலைமை வகித்தார். நிர்வாகிகள் நஞ்சாரெட்டி, அம்ரீஷ், நந்தீஸ்ரெட்டி, சீனிவாசன், சங்கர் முன்னிலை வகித்தனர். மா.கம்யூ., கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், மூத்த நிர்வாகிகள் நாகராஜரெட்டி, பாண்டியன், தளி ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட குழு உறுப்பினர் அனுமப்பா ஆகியோர் கண்டன உரையாற்றினர். கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது. முன்னதாக, அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தப்பட்டது.