/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு சாலையில் ஓடும் கழிவுநீரால் அவதி
/
பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு சாலையில் ஓடும் கழிவுநீரால் அவதி
பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு சாலையில் ஓடும் கழிவுநீரால் அவதி
பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு சாலையில் ஓடும் கழிவுநீரால் அவதி
ADDED : மே 20, 2025 02:16 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பாரதியார் நகர், 2வது கிராசில், பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த, 2 நாட்களாக பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மேனுவல் மூடி வழியாக, சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இங்கு பாதாள சாக்கடை கால்வாய் அமைத்தது முதல், எப்போது மழை பெய்தாலும், பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழை நீருடன் சேர்ந்து கழிவுநீரும் சாலையில் ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால், வீடுகளில் குடியிருக்கவும், சாப்பிடவும் முடிவதில்லை. மாதக்கணக்கில் இவற்றை, நகராட்சி நிர்வாகம் சீரமைக்காமல் உள்ளதால், இப்பகுதியில் வசிப்பவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் இங்குள்ள பாதாள சாக்கடை கால்வாய் அடைப்பை சரிசெய்ய வேண்டும்' என்றனர்.