மதிய நேர தேர்தல் பிரசாரம் தவிர்க்க மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
மதிய நேர தேர்தல் பிரசாரம் தவிர்க்க மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
ADDED : ஏப் 02, 2026 04:48 AM
தர்மபுரி,தர்மபுரி மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மதிய நேர தேர்தல் பிரசாரத்தை தவிர்க்க, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதில், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணியில் வேட்பாளர்களை அறிவித்து, பிரசார பணிகளை தொடங்க ஆயுதமாகி உள்ளனர். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கி விட்டார். தர்மபுரி மாவட்டத்தில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள், வீட்டை விட்டு வெளியில் வரத்தயங்குகின்றனர். இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தை வெயில் நேரத்தில் நடத்துவதை தவிர்க்க, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:
கோடை வெயிலின் தாக்கம், 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கும் மேல் அதிகரிக்கும் சூழல் உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மேலும், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெயில் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, உடல் சோர்வு, மயக்க நிலை ஏற்பட்டு, உடல்நிலை பாதித்து பொதுமக்கள் பாதிக்கக்கூடும். மதியம், 12:00 முதல், 3:00 மணி வரை அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டி, மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வரும். அரசியல் கட்சிகளும், இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
'நீல்
