தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்


ADDED : மார் 07, 2025 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2025 02:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வீட்டில் காஸ் கசிந்து தீ விபத்துரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த கரியசந்திரத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், கூலித்தொழிலாளி. இவர் அங்குள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், இவரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். தொகுப்பு வீட்டை புதுப்பிக்கும் பணி நடந்ததால், ரஞ்சித்குமார் அருகே குடிசையில் தங்கியிருந்தார். நேற்று மதியம் சமையல் காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதில், டூவீலர் வாங்க வைத்திருந்த, 35,000 ரூபாய் மற்றும் வீட்டு எலக்ட்ரிக்கல் வேலைக்கு வைத்திருந்த ஒயர்கள் உட்பட, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us