தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இருவேறு இடங்களில் நடந்தசாலை விபத்தில் 2 பேர் பலி

இருவேறு இடங்களில் நடந்தசாலை விபத்தில் 2 பேர் பலி

இருவேறு இடங்களில் நடந்தசாலை விபத்தில் 2 பேர் பலி


ADDED : பிப் 19, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இருவேறு இடங்களில் நடந்தசாலை விபத்தில் 2 பேர் பலி

அரூர்: அரூர் அடுத்த பறையப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார், 38. இவர், அரூரில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:15 மணிக்கு கடையை பூட்டி விட்டு, ஹீரோ பைக்கில் வீட்டிற்கு சென்றார். அரூர் - ஊத்தங்கரை சாலையில், சோரியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பழுதாகி நின்ற லாரியின் பின்பக்கம், பைக் மோதியதில் விஜயகுமார் படுகாயமடைந்து பலியானார்.

அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தீர்த்தகிரி, 64. இவர், நேற்று காலை, 7:00 மணிக்கு டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில், அரூர் - திருவண்ணாமலை சாலையில், சங்கிலிவாடி காமராஜர் நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில், படுகாயமடைந்த தீர்த்தகிரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவங்கள் குறித்து, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us