/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அமையும் பகுதியில்ரூ.37.93 கோடியில் 2 இடங்களில் மேம்பாலம்

ADDED : மார் 09, 2025 01:39 AM
ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அமையும் பகுதியில்ரூ.37.93 கோடியில் 2 இடங்களில் மேம்பாலம்
ஓசூர்:ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அமையும் பகுதியில், பஸ்கள் சென்று வர வசதியாக, தேசிய நெடுஞ்சாலையின், 2 இடங்களில், 37.93 கோடி ரூபாயில், 2 மேம்பாலங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட், கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது. பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம், பத்தலப்பள்ளி அருகே ஹட்கோ போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், 10 ஏக்கரில், 50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடக்கிறது. இங்கு வந்து, செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் தான் திரும்பி செல்ல வேண்டும் என்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதை நமது நாளிதழில் சுட்டிக்காட்டி செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக ஓசூர் புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் நுழையும், வெளியேறும் பகுதிகளில், 2 மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து, 37.93 கோடி ரூபாய் ஒதுக்கியது. பணியை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு கடந்த வாரம் டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம், 90 நாட்களுக்குள் பணியை துவங்க திட்டமிட்டுள்ளது. வரும் மே மாத இறுதிக்குள், 2 மேம்பால பணிகளும் துவங்கி விடும் எனவும், அப்பணியை ஓராண்டிற்குள் முடிக்கவும், தேசிய நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பத்தலப்பள்ளியில் சாலையை பயணிகள் கடக்க சுரங்கப்பாதை அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.