/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
/
ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
ADDED : ஜன 22, 2025 01:34 AM
ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
ஓசூர்: ஓசூர் அருகே, குமுதேப்பள்ளியிலுள்ள திப்பாளம் சாலையை சேர்ந்தவர் மஞ்சுநாதன், 37. டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்; பொங்கல் பண்டிகை கொண்டாட கடந்த, 13 காலை, 11:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, சொந்த ஊரான, காரிமங்கலம் அருகே, அகரம் கிராமத்திற்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் சமையலறையிலுள்ள ஜன்னல் கம்பிகளை அறுத்து வீட்டிற்குள் புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்து, 4.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 9 பவுன் நகையை திருடி கொண்டு, அதே வழியில் தப்பினர். வீட்டிற்கு திரும்பிய மஞ்சுநாதன், நகை திருட்டு போனது கண்டு, நேற்று முன்தினம் அளித்த புகார் படி ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.