ADDED : ஆக 31, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, தர்மபுரி நோக்கி நேற்று முன்தினம் இரவு பயணிகள் ரயில் சென்றது. ஓசூர் - மாரநாயக்கனஹள்ளி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, தளி ரயில்வே கேட் அருகே ரயில் சென்ற போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற, 22 வயது வாலிபர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வாலிபர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
ரயில் இன்ஜின் பைலட் கொடுத்த தகவல்படி, ஓசூர் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், உயிரிழந்தவர், ஓசூர், முனீஸ்வர் நகரில் வசிக்கும் மவுலி, 22, என்பது தெரிந்தது. டிப்ளமோ
ஆட்டோமொபைல் படித்திருந்த மவுலி, 6 மாதமாக வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்துள்ளார். ஓசூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.