/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அறிஞர் அண்ணா கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
அறிஞர் அண்ணா கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
அறிஞர் அண்ணா கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
அறிஞர் அண்ணா கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2025 12:40 AM
அறிஞர் அண்ணா கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி, :-கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் உள்ள, அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பொங்கல் திருவிழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் தனபால் தலைமை வகித்தார். விழாவில், மாவட்ட குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.ஐ., சரவணன், தலைமை காவலர் உதயகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில், அனைத்து துறை மாணவ, மாணவியர் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் அனைத்து துறை தலைவர்களும், உதவி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கு சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.