ADDED : ஜன 24, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேவர் பிளாக் சாலை அமைக்க பூஜை
கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி ஒன்றியம் தேவசமுத்திரம் பஞ்., முஸ்லீம் நகரில், பாபு வீடு முதல் பரியல் கிரவுண்ட் வரை, சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில், பேவர் பிளாக் சாலையும், அக்ரஹாரம் காலனியில், மாரியம்மன் கோவில் முதல் தமிழரசன் வீடுவரை, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் சாலையும் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் நேற்று பூஜை செய்து துவக்கி வைத்தார்.
மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, பஞ்., தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் திம்மராயன், முன்னாள் தலைவர் முனிரத்தனம், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

