/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொலைத்த தாலியை மீட்டு கொடுத்த எஸ்.ஐ.,
/
தொலைத்த தாலியை மீட்டு கொடுத்த எஸ்.ஐ.,
ADDED : ஜன 29, 2025 01:06 AM
ஊத்தங்கரை : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே அனுமன்தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அனுமன்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.
இங்கு தினமும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம், திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த சத்யா, 30, அவரது கணவர் பிரபு ஆகியோர் கோவிலுக்கு வந்து ஆற்றில் புனித நீராடினர். பின் உடை மாற்றும் போது சத்யாவின் தாலி தொலைந்து போனது. சுவாமி தரிசனம் செய்த பின் பார்த்தபோது கழுத்தில் தாலி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த சத்யா, கதறி அழுதுள்ளார். அவர் புகார் படி, ஊத்தங்கரை போலீஸ் எஸ்.ஐ., மோகன், தீவிர விசாரணை நடத்தினார். அப்போது, தாலியை எடுத்த நபர், கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தான லட்சுமியிடம் அதை கொடுத்துள்ளார். அவர், எஸ்.ஐ., மோகனிடம் ஒப்படைத்துள்ளார். அவரிடமிருந்து தாலியை பெற்றுக் கொண்ட சத்யா, அவருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

