/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கள்ள நோட்டு விவகாரத்தில்மூவரிடம் போலீசார் விசாரணை
/
கள்ள நோட்டு விவகாரத்தில்மூவரிடம் போலீசார் விசாரணை
ADDED : ஜன 30, 2025 01:26 AM
கள்ள நோட்டு விவகாரத்தில்மூவரிடம் போலீசார் விசாரணை
ஊத்தங்கரை :கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சோளக்காப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ், 30. கள்ளநோட்டு விவகாரத்தில், சேலம் போலீசாரால் நேற்று முன்தினம் கைதானார். இவரின் வீட்டை நேற்று, சேலம், சூரமங்கலம் போலீசார் சோதனை செய்தனர். அவர் வீட்டின் அருகில் கருகிய நிலையில் கலர் பிரிண்டரும், பேப்பர்களும் இருந்ததை கைப்பற்றினர். மேலும் தினேஷிற்கு உறுதுணையாக இருந்த அவரது தந்தை கோவிந்தராஜ், 2வது மனைவி யசோதா, 3வது மனைவி மலர் ஆகியோரை விசாரணைக்காக, சேலத்திற்கு,
சூரமங்கலம் போலீசார் அழைத்து சென்றனர்.தினேஷ், கடந்த, 2018 ல் கள்ள நோட்டு விவகாரத்தில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

