/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதுமை, புத்தாக்க மையம்: அரசு பள்ளியில் திறப்பு
/
புதுமை, புத்தாக்க மையம்: அரசு பள்ளியில் திறப்பு
ADDED : பிப் 02, 2025 01:21 AM
புதுமை, புத்தாக்க மையம்: அரசு பள்ளியில் திறப்பு
ஓசூர்,: தேன்கனிக்கோட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வனத்துறையின் உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் மற்றும் தமிழக புத்தாக்க முயற்சி திட்டம் ஆகியவை சார்பில், புதுமை மற்றும் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காவிரியாற்றின் கரைகளில் காணப்படும் அரிய வகை உயிரினங்களான நாற்கொம்பு மான் மற்றும் ஆற்று நீர்நாய் போன்றவற்றின் உருவபொம்மைகள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. கட்டடத்தின் சுவற்றில் மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வனம் சார்ந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் இந்த மையத்தை பார்வையிடலாம்.
சுற்றுச்சூழல் கல்வி பற்றி விவாதிக்கவும், வன உயிரின விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த மையத்தை வனத்துறை அமைத்துள்ளது. ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர், முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ் ஆகியோர் முன்னிலையில், பள்ளி மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் மையத்தை திறந்து வைத்தார். உதவி வன பாதுகாவலர் யஸ்வந்த் ஜெகதீஷ் அம்புல்கர், வனச்சரகர் விஜயன், தலைமையாசிரியர் காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.