/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பயிர்களை சேதப்படுத்திய யானைகள் விரட்ட விவசாயிகள் வேண்டுகோள்
/
பயிர்களை சேதப்படுத்திய யானைகள் விரட்ட விவசாயிகள் வேண்டுகோள்
பயிர்களை சேதப்படுத்திய யானைகள் விரட்ட விவசாயிகள் வேண்டுகோள்
பயிர்களை சேதப்படுத்திய யானைகள் விரட்ட விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : பிப் 09, 2025 01:06 AM
ஓசூர்,:தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை, யானைகள் சேதப்படுத்தின.கிருஷ்ணகிரி மாவட் டம், தேன்கனிக்கோட்டை கஸ்பா வனப்பகுதியில், 5க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவை, இரவில் வனத்தை விட்டு வெளியேறி, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அதுபோல் நேற்று முன்தினம் இரவு வெளியேறிய, யானைகள், லிங்கதீரனப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்து, அப்பகுதி தக்காளி, பீன்ஸ் தோட்டங்களில் செடிகளை சேதப்படுத்தின. மேலும், விவசாய நிலங்களுக்கு சென்ற பைப்புகளை உடைத்து விட்டு, அதிகாலையில் மீண்டும் வனத்திற்கு திரும்பின.
யானைகளால் தொடர்ந்து பயிர்கள் சேதமாகி வருவதால், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் மொத்தம், 10க்கும் மேற்பட்ட யானைகளும், ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில், 20க்கும் மேற்பட்ட யானைகளும், ஓசூர் வனச்சரகம், சானமாவு காப்புக்காட்டில், 10க்கும் மேற்பட்ட யானைகளும் முகாமிட்டுள்ளன. அவற்றை ஒன்றாக இணைத்து, கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு விரட்ட, விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.