/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பூச்சிக்கொல்லி மருந்தை உறிஞ்சிய விவசாயி சாவு
/
பூச்சிக்கொல்லி மருந்தை உறிஞ்சிய விவசாயி சாவு
ADDED : பிப் 12, 2025 01:20 AM
பூச்சிக்கொல்லி மருந்தை  உறிஞ்சிய விவசாயி சாவு
கிருஷ்ணகிரி :  பர்கூர், அங்கிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் சின்னசாமி, 44, விவசாயி. கடந்த, 7ல், இவரது முள்ளங்கி தோட்டத்திற்கு இயந்திரம் மூலம் பூச்சிகொல்லி மருந்து தெளிக்க வேளாண் ரசாயன பொருட்களை கலந்து கொண்டிருந்தார். இயந்திரத்தின் டியூப்பை வாயில் வைத்து உறிஞ்சிய போது ரசாயன கலவை சிறிதளவு வயிற்றுக்குள் சென்றது. அதை வெளியே துப்பிய நிலையில், முழுவதும் வெளியேறவில்லை. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையும் பெறவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், கடந்த, 10ல் மயக்கமடைந்தார். பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், மூச்சுத்திணறி உயிரிழந்தார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

