/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மினி பஸ் வழித்தடங்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
மினி பஸ் வழித்தடங்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : பிப் 23, 2025 01:27 AM
மினி பஸ் வழித்தடங்களை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை முதல்வர் மருந்தகம், காந்திரோடு உழவர் சந்தை அருகில், கூட்டுறவு துறை சேமிப்பு கிடங்கு, தானம்பட்டியில் மினி பஸ்கள் இயக்குவதற்கான வழிதடங்களை கமிஷனர், சுற்றுலாத்
துறை மற்றும் மேலாண் இயக்குனர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்ட் மற்றும் தானம்பட்டி பகுதியில், மினி பஸ்கள் இயக்குவதற்கான வழி
தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த பின், அவர் கூறுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பஸ் இயக்கம் இல்லாத கடைக்கோடி கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களுக்கு, விரைவில் மினி பஸ்கள் இயக்கம்
துவங்கப்பட உள்ளது,'' என்றார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை, போக்குவரத்து துறை மற்றும் வருவாய் துறை சார்பாக மினி பஸ் இயக்கம், வீட்டுமனை பட்டா வழங்கும் பணிகள் மற்றும் முதல்வர் மருந்தகம் துவங்கும் பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர் (பொது) குமரன், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

