/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சரியாக மூடப்படாத பள்ளத்தில்ஆட்டோ சிக்கி குழந்தை காயம்
/
சரியாக மூடப்படாத பள்ளத்தில்ஆட்டோ சிக்கி குழந்தை காயம்
சரியாக மூடப்படாத பள்ளத்தில்ஆட்டோ சிக்கி குழந்தை காயம்
சரியாக மூடப்படாத பள்ளத்தில்ஆட்டோ சிக்கி குழந்தை காயம்
ADDED : பிப் 23, 2025 01:27 AM
சரியாக மூடப்படாத பள்ளத்தில்ஆட்டோ சிக்கி குழந்தை காயம்
ஓசூர்:ஓசூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 45 வார்டுகளில், 20 வார்டுகளில் முழுமையாகவும், 15 வார்டுகளில் பகுதியாகவும், 582.54 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டவுடன் சரியாக மூடப்படு
வதில்லை. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். 6வது வார்டுக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியில் பாதாள சாக்கடைக்காக தோண்டி மூடப்பட்ட சாலை வழியாக நேற்று, அப்பகுதியை சேர்ந்த முபாரக், 32, என்பவர் தன், 3 வயது பெண் குழந்தையை அழைத்து கொண்டு ஆட்டோவில் சென்றார்.
அப்போது, திடீரென பள்ளத்தில் ஆட்டோ சிக்கி விபத்துக்குள்ளானதில், குழந்தை ஆட்டோவின் முன்பக்கமாக விழுந்து, மூக்கில் காயம் ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாநகராட்சி பகுதிகளில் தினமும் ஆட்டோக்களில் நுாற்றுக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். இதுபோன்று, பாதாள சாக்கடை பணிகளை முடித்து சரியாக சாலையை மூடாமல் விடுவதால், மாணவ, மாணவியர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக, பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.