/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையை கடக்க மாணவியருக்குஉதவிய 'போதை' பெண்மணி
/
சாலையை கடக்க மாணவியருக்குஉதவிய 'போதை' பெண்மணி
ADDED : பிப் 27, 2025 02:02 AM
சாலையை கடக்க மாணவியருக்குஉதவிய 'போதை' பெண்மணி
போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பு பகுதியில்,நேற்று முன்தினம் மாலை, 45 வயது மதிக்கத்தக்க பெண், குடி போதையில் தடுமாறியபடி சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது, போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விட்டதால், வீடு திரும்பிய மாணவியர் சாலையை கடக்க நின்றிருந்தனர். அவர்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க அப்பெண் பல முறை உதவினார். குடி போதையில் இருந்தாலும், சாலையை கடக்க மாணவியருக்கு உதவிய அப்பெண்ணின் செயலை சிலர் வீடியோ எடுத்து வைரலாக்கினர். போதை பெண்ணின் செயலை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், போலீசார் செய்ய வேண்டிய பணியை, போதையிலிருந்த பெண் செய்ததற்கு பாராட்டு தெரிவித்தனர்.

