/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அங்காள பரமேஸ்வரி கோவிலில் தீ மிதி திருவிழா
/
அங்காள பரமேஸ்வரி கோவிலில் தீ மிதி திருவிழா
ADDED : மார் 02, 2025 01:44 AM
அங்காள பரமேஸ்வரி கோவிலில் தீ மிதி திருவிழா
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கடந்த, 25ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 26ல் மகா சிவராத்திரி விழா, 27ல் அம்மன் மயான கொள்ளைக்கு புறப்படும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் மாலை, அம்மனுக்கு தாலாட்டு, கூழ் ஊற்றி விடாய் உற்சவம் நடந்தது.
நேற்று இரவு, 8:00 மணிக்கு அக்னி குண்டம் தீ மிதி விழா நடந்தது. இதில், மயானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவரை, சுமந்து வந்த பூசாரிகள் மற்றும் பூ கரகம் சுமந்து வந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கினர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றினர். நிகழ்ச்சியில், 10க்கும் மேற்பட்டவர்கள் காளி, அம்மன் வேடம் அணிந்து குண்டத்தில் இறங்கினர். ஏராளமான பக்தர்கள், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி வேண்டுதல் நிறைவேற்றினர்.