/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
த.வெ.க., மாவட்ட நிர்வாகிஅறிமுக கூட்டத்தில் தள்ளு முள்ளு
/
த.வெ.க., மாவட்ட நிர்வாகிஅறிமுக கூட்டத்தில் தள்ளு முள்ளு
த.வெ.க., மாவட்ட நிர்வாகிஅறிமுக கூட்டத்தில் தள்ளு முள்ளு
த.வெ.க., மாவட்ட நிர்வாகிஅறிமுக கூட்டத்தில் தள்ளு முள்ளு
ADDED : மார் 03, 2025 01:47 AM
த.வெ.க., மாவட்ட நிர்வாகிஅறிமுக கூட்டத்தில் தள்ளு முள்ளு
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது.
ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மத்துார், ஊத்தங்கரையில், 20 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் ரசிகர் மன்றத்தில் பணியாற்றி வந்தோருடன் கலந்து ஆலோசிக்காமல், அவர்களுக்கு பொறுப்புகள் வழங்காமல், வசதி படைத்தவர்களுக்கும், தற்போது கட்சியில் இணைந்தவர்களுக்கும், பொறுப்புகள் வழங்கப்பட்டதாக கூறி, 20க்கும் மேற்பட்டோர் கோஷம் எழுப்பினர்.
இதனால், அறிமுக கூட்டத்தில், த.வெ.க., கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட த.வெ.க., கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முரளிவிஜய் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, முன்னுரிமை, ஆர்வத்துடன் கட்சி பணியாற்றுபவர்களுக்கு பதவி வழங்கப்படும் என கூறியதை அடுத்து, தொண்டர்கள் சமாதானம் அடைந்தனர்.