/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநகராட்சியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
/
மாநகராட்சியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
ADDED : மார் 09, 2025 01:38 AM
மாநகராட்சியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
ஓசூர்:ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா தலைமை வகித்தனர். பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா முன்னிலை வகித்தனர். மாநகர நல அலுவலர் அஜிதா, கவுன்சிலர்கள் லட்சுமி, மோசின்தாஜ், மஞ்சுளா, கணக்கு குழு தலைவர் பார்வதி நாகராஜ், மல்லிகா தேவராஜ் மற்றும் துாய்மை பணியாளர்கள் இணைந்து, 20 கிலோ கேக் வெட்டி, மகளிர் தின விழா வாழ்த்து தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், அலுவலர்கள், ஊழியர்களுக்கு, மாநகராட்சி அலுவலகத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மேயர் சத்யா முகாமை துவக்கி வைத்தார். மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர்கள் நாகராஜ், மஞ்சுநாத், வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.