/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க ஏ.ஐ., தெர்மல் கேமரா
/
விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க ஏ.ஐ., தெர்மல் கேமரா
விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க ஏ.ஐ., தெர்மல் கேமரா
விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க ஏ.ஐ., தெர்மல் கேமரா
ADDED : மார் 28, 2025 01:25 AM
விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க ஏ.ஐ., தெர்மல் கேமரா
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொத்த பரப்பளவில், 1.66 லட்சம் ஹெக்டேர் நிலம் வன பகுதியை உள்ளடக்கியது. வனத்தில், மான், காட்டுப்பன்றி ஆகியவை வேட்டையாடுவது தொடர்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு வனச்சரக அலுவலக எல்லைகளில், 64 யானைகள் உள்ளன. மேலும் இங்கு, வலசு காலங்களில் கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து ஏராளமான யானைகள் வந்து செல்வது வழக்கம்.
இது குறித்து, தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறுகையில், ''தர்மபுரி மாவட்ட வனச்சரகங்களில் பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு பகுதிகளில் யானைகள் உள்ளன. இவை கோடையில் வனத்தை விட்டு வெளியேறி, பயிர்களை நாசம் செய்வதுடன், மக்களையும் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. பொதுமக்களின் உயிரை காக்கவும், யானை உள்ளிட்ட விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க, மாவட்ட வனத்துறை சார்பாக பென்னாகரம், ஒகேனக்கல், பாலக்கோடு வனச்சரத்தில், சொக்கம்பட்டி வரை, வனத்திலிருந்து யானைகள் வெளியேறும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக பாலக்கோடு வனச்சரகத்தில், 6 இடங்களில், ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கண்காணிப்பு கேமராக்கள், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சோலோர், இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வன அலுவலகத்தில் இருந்தவாறு, யானைகள் நடமாட்டம், வெளியேறும் திசை உள்ளிட்டவற்றை அறிந்து, மீண்டும் அவற்றை வனத்துக்குள் விரட்டும் பணியை உடனடியாக தொடங்கி வருகிறோம். தற்போது, பென்னாகரம் வனச்சரகத்தில் யானை வேட்டையாடப்பட்ட நிலையில், ஏமானுார், கொங்காரப்பட்டி, சிங்காபுரம் உட்பட பல முக்கிய பகுதிகளில் ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் தெர்மல் கேமராக்கள் பொருத்த, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கிய உடன் அப்பகுதிகளில், அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படும்,'' என்றார்.